காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.மோகனன், மாநிலப் பொருளர் துளசி நாராயணன், மாவட்டச் செயலர் கே.நேரு உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும். இன்று (ஜன.6) காத்திருப்பு போராட்டம் நடைபெறும். ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்குரிய, வீடுகளுக்குரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும், பாலாற்றில் அரசு அறிவித்த இடங்களில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago