கரும்பு கிரையத் தொகையை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் பாண்டியன் தலை மையேற்றார். சங்க செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

2019-20 ஆண்டின் முதன்மை பருவம், பின்பருவம் இரண்டிலும் கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு காலதாமதமாக கிரையபணம் பட்டுவாடா செய்வதால் காலதாமத மான நாட்களுக்கு வட்டி கணக் கிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு கரும்பு விவசா யிகளுக்கு ஊக்கத் தொகை ரூ. 500 வழங்க வேண்டும். விதை கரணைகளை ஆலை நிர்வாகம் இலவசமாக வழங்க வேண்டும். தோட்டப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் மீண்டும் கரும்பு நடவு செய்ய ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகம் ஏற்கவேண்டும். கரும்பு கிரைய தொகையை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். நான்கு ஆண்டுகால கரும்பு நிலுவைத் தொகை ரூ.160 ஐ ஆலை நிர்வாகம் தாமதமின்றி வழங்க வேண்டும். தமிழகஅரசு அறிவித்த ஊக்கதொகை யான டன் ஒன்றுக்கு ரூ. 137.50 ஐ ஆலை நிர்வாகம் உடனே வழங்கவேண்டும். அனைத்து ரககரும்புகளை பயிரிட ஆலை நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கலிவரதன், ராஜாராமன், வெங்கிடசாமி, கிருஷ்ணதாஸ், ரங்கநாதன், பாலசுப்பிர மணியன், நாராயணன், ராஜசேகர், தண்டபாணி, காத்தவராயன், பெரு மாள், மணிவண்ணன், முத்து நாராயணன், தேவேந்திரன், நடராஜன், செந்தில்குமார், சுப்பிர மணியன், மகேஸ்வரன், பன்னீர் செல்வம், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்ட முடிவில் சங்கப் பொருளாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்