மணிமுக்தா ஆற்றில் ஐம்பொன் சிலை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அருகே சித்தலூர் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றில் நேற்று முன்தினம் மாலை சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அங்கு குளித்து கொண்டிருந்த இருவரின் காலில் ஏதோ தட்டுப்பட, நீரில் மூழ்கி அதை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்பினர். கரையில் வந்து பார்த்தபோது அது 1 அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை என்பது தெரிய வந்தது. அது, ‘வனதேவதையின் சிலை’ என அங்கிருக்கும் சிலர் கூற, உடனே கிராம மக்கள் அச்சிலையை ஒரு இடத்தில் வைத்து, வழிபாடு செய்யத் தொடங்கினர்.

இத்தகவல் அறிந்த அக்கிராம நிர்வாக அலுவலர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரனுக்கு தக வல் அளித்தார். இதையடுத்து நேற்றுவருவாய்துறையினர் அங்கு வந்து,அச்சிலையை வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்