அடுக்கடுக்காக குறைகளை தெரிவித்த திமுகவினர் சிவகங்கை நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

சிவகங்கையில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை நகராட்சி அதிகாரிகளிடம் திமுகவினர் தெரிவித்தனர்.

சிவகங்கை நகராட்சிப் பகுதி களில் திமுகவினர் இதுவரை 8 மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி உள்ளனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் குறித்து, திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த் தலைமையிலான அக்கட்சியினர் நகராட்சி ஆணையர் அய்யப்பனிடம் மனு கொடுத்தனர்.

அப்போது திமுகவினர் கூறியதாவது: நகராட்சியில் குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை. அள்ளப்படும் குப்பைகளும் ஆங்காங்கே சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. வார்டு 18, 19 மற்றும் 21-ல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான தெரு விளக்குகள் எரியவில்லை.

பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படு கின்றன. பாதாள சாக்கடைப் பணிகள் முடியாததால், மழை நேரங்களில் கழிவுநீர் கலந்து சாலைகளில் வெளியேறுகிறது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

குடிநீர் பிளாஸ்டிக் தொட்டிகள் சேதம் அடைந்ததால், பொது மக்கள் தணணீருக்காகச் சிரமப்படு கின்றனர் என அடுக்கடுக்காகக் குறைகளைத் தெரிவித்தனர். குறைகளை விரைவில் சரிசெய்து தருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்