ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஜன.8-ல் பெற்றோரிடம் கருத்து கேட்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பள்ளிகளை

திறப்பது குறித்து பெற்றோர் களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:

பொங்கலுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் வரும் 8-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு வரும் பெற்றோர் முகக்கவசம் அணிந்து வரவும், அவர்களுக்கு கிருமி நாசினி அளித்து கூட்டத்தில் பங்கேற்கச் செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகளை எழுத்து மூலம் பெற்று தொகுத்து அளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்