கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகை யில், மாவட்டத்தில் உள்ள 1863 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களிடையே வாக்களிக்கும் முக்கியத்துவம், சுதந்திர மாக வாக்களிக்க இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து வாக்குச் சாவடி களிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அல்லது தேர்தல் ஆணைய இணையதளம் https://www.nvsp.in/ மற்றும் www.elections.tn.gov.in மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது, என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago