திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கேத் தாண்டப்பட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, 250 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கரும்பு வரத்து குறைவு காரணாமாக கடந்த ஆண்டு (2019-20) கரும்பு அரவை நிறுத்தப்பட்டது. இதனால், தொழிலாளர்கள் வேலையை இழந்து பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, நடப்பாண்டும் கரும்பு அரவை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஆலை நிர்வாகம் 2020-21-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தது. இதையடுத்து, தொழி லாளர்களின் தொடர் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டுக் கான (2020-21) கரும்பு அரவை நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்கு நர் (பொறுப்பு) ரஹமதுல்லாகான் முன்னிலை வகித்தார். முன்னதாக, கரும்பு உற்பத்தி மேம்பாடு அலு வலர் வெற்றிவேந்தன் வரவேற்றார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கரும்பு அரவையை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன், அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுத் தலை வர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்சிவன் அருள் கூறும்போது, "திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் கோரிக் கையை ஏற்று நடப்பாண்டுக் கான கரும்பு அரவை தொடங்கப் பட்டுள்ளது.
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு, ஆம்பூர் சர்க்கரை ஆலையில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு, போளூர் பகுதியில் இருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு என மொத்தம் 63 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினசரி 1,200 டன் முதல் 1,400 டன் வரை அரவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 2 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவ மழை பரவலாக பெய்துள்ளதால் கரும்பு சாகுபடி அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் கரும்பு அரவை தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர செங்கம், ஊத்தங்கரை, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்காக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆலையில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை உறுப்பினர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago