பொய்கை சந்தையில் களை கட்டிய கால்நடை விற்பனை

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொய்கை கால்நடை சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியது.

வேலூர் அடுத்த பொய்கையில் கால்நடை சந்தை சுற்று வட்டார அளவில் மிகப்பெரியதாக உள்ளது. வாரந்தோறும் செவ் வாய்க்கிழமையன்று நடைபெறும் சந்தையில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து கன்றுகளுடன் பசுக் களையும், காளை மாடுகளையும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் நிலையில் பொய்கை சந்தையில் விற்பனைக்காக ஏராளமான பசு, கன்று களுடன், காளை மாடுகளையும் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில், கறவை மாடுகள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பலர் வாங்கிச் சென்றனர். குறைந்த எண்ணிக்கையிலான கால்நடைகள் விற்பனைக்காக வந்தாலும் பெரும்பாலான கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேபோல், எருது விடும் போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளை வளர்ப்புக்காக இளம் கன்றுகளை தேடிப்பிடித்து வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி பசு, காளை மாடுகளுடன் ஆடு, கோழி விற்பனையும் அதிகளவில் நடந்தது. பொங்கலுக்கு முந்தைய வர்த்தகம் என்பதால் நேற்று ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்