திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் நடைபெறும் முறைகேடுகளை ஆட்சியர் தடுக்க தவறினால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்பி அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை திமுக எம்பி அண்ணா துரை, திமுக எம்எல்ஏக்கள் பிச்சாண்டி, சேகரன், கிரி, அம்பேத் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி கள் சந்தித்துப் பேசினர். அப்போது, மத்திய, மாநில அரசுகளின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படு வதாக தெரிவித்தனர்.
பின்னர் எம்பி அண்ணாதுரை கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஏற்கெனவே இருந்த மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது. ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், தங்களது சுய நலனுக்காக கடந்த 3 ஆண்டுகளாக ஆளுங் கட்சிக்கு வளைந்து கொடுத்து, மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறை கேடாக பயன்படுத்தினர் என்றும், ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர், நேர்மையான நிர்வாகத்தை நடத்தி, அனைத்து பகுதிகளுக்கும் முறைகேடு இல்லாமல் மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாற்றம் என்பது விரைவாக ஏற்பட வேண்டும்.
மாற்றம் ஏற்படாமல், அதே நிர்வாகம் தொடர்ந்தால், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை கண்டித்து மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசு நிதிகளை பயன்படுத்துவதில் உள்ள குறைகளை விரைவாக சரி செய்யப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago