சிப்காட் திட்டத்தை ரத்து செய்து அரசாணை சட்டப்பேரவைத் தலைவரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட தத்தனூர், புஞ்சைதாமரைக்குளம், புலிப்பார் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகளுக்குரிய சுமார் 890 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் மூலமாக தத்தனூர் தொழிற்பூங்கா என்ற திட்டத்தை பன்னாட்டு நிறுவனத்தால் ரூ.2,500 கோடியில் செயல்படுத்துவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டது. இத்திட்டம் குறித்து அறிந்த பொதுமக் கள், தொழிற்பூங்கா வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் நேற்று அவிநாசி வந்தார். அவரிடம் மேற்கூறப்பட்ட 3 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மனு விவரம்:

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை மட்டும் நம்பி வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதிகளின் தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், வறட்சியை வளமையாக்கவும் அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் முன்னரே, சிப்காட் திட்டம் குறித்த அறிவிப்புகள் எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொழிற்சாலைகள் அமைக்க எங்களது விளைநிலங்களை கைய கப்படுத்தினால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை வருவதோடு, நீர், நிலம் மற்றும் காற்று மாசடைந்து மக்கள் வாழ தகுதியற்ற சூழல் ஏற்படும். பொதுமக்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக, கடந்த 28-ம் தேதி பெருமாநல்லூர் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி, இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படாது என அறிவித்தார். இது தற்காலிக தீர்வு என்றே கருதுகிறோம். எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு நிரந்தர தீர்வாக இத்திட்டத்தை ரத்து செய்வதாக அரசாணை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள் ளனர்.

மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதாக விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்