மண்டபத்தில் செயல்படும் தனியார் கேளிக்கை விடுதியை நிரந்தரமாக மூடக் கோரி கடல் தொழிலாளர் சங்கத்தினர், கிராம மக்கள் காதில் பூச்சூடி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டபம் பேரூராட்சி தோணித்துறை, தோப்புக்காடு ஆகிய கிராமங்களில் மீன்பிடி தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி வரும் தனியார் கேளிக்கை விடுதியை (ரிசார்ட்) அகற்றக் கோரி கடல் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு), தோணித்துறை, தோப்புக்காடு மக்கள் சார்பில் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலு வலகத்தில் காதில் பூச்சூடி போராட்டம் நடத்த வழிவிடு முருகன் கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200 பேர் நேற்று காலை திரண்டனர்.
ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை, பஜார் போலீஸ் ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகி யோர் சிஐடியூ நிர்வாகிகள் சிவாஜி, கருணாமூர்த்தி, ஜஸ்டின், கிராமத் தலைவர்கள் பால்ச்சாமி, ரூபன் ஆகியோரை சார் ஆட்சி யரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
இரவு வரை நீடித்த போராட்டம்
இவர்களிடம் சார்-ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா பேசும்போது, ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார். இதற்கு சிஐடியூ சங்கத்தினர், கிராம மக்கள், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, காதில் பூச்சூடி சார்-ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.
இது குறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறியதாவது:
அரசு அனுமதியின்றி தனியார் கேளிக்கை விடுதி செயல்படுகிறது.
மேலும் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடலில் பெரிய சிமெண்ட் உறைகள், பாறாங்கற்களைப் போட்டு வைத்துள்ளனர். இத னால் மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறு ஏற்படுகிறது.
ராமநாதபுரம் வட்டாட்சியர் டிசம்பர் 24-ல் கேளிக்கை விடுதியை ஆய்வு செய்தபோது, 2 நாளில் விடுதியை மூடிவிடுவதாக உறுதியளித்தார். வாக்குறுதியை நிறைவேற்றாததால் போராட் டத்தில் இறங்கினோம். சார்-ஆட்சியரும் சரியான பதில் தெரிவிக்காததால் காதில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபட்டோம். விடுதியை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago