சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே தெற்குவாடியில் 19 குடும்பங்களைச் சேர்ந்தோர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர். அவர்கள் தங்களது ஆடுகளை அடைப்பதற்கு சொந்த இடம் இல்லாததால், குடஞ்சாடி கண்மாய் பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்திருந்தனர்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், குடில்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர். குடில்கள் இல்லாததால் மழையில் நனைந்து சில ஆடுகள் இறந்தன. இதையடுத்து குடில்களை அகற்றியதைக் கண்டித்து இறந்த ஆடுகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். பிறகு அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் லதாவிடம் புகார் மனு கொடுத்தனர். இது குறித்து வட்டாட்சியர் மைலாவதி கூறுகையில், ஆடுகளை அடைப்பதற்கு அப்பகுதியில் 80 சென்ட் நிலத்தை ஒதுக்கியுள்ளோம். ஆனால், அங்கே செல்ல மறுக்கின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்