குடிநீர் வழங்கக்கோரி குடங்களுடன் கிருஷ்ணகிரியில் மக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை நேதாஜி சாலை 7-வது வார்டு உட்பட்ட மில்லத் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப் புகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக நகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று அப்பக்குதி மக்கள நேதாஜி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இரவு 2 மணிக்கு குடிநீரை திறந்துவிடுகின்றனர். அதனால் எங்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. கழிப்பறை வசதியும் இல்லை. எனவே சீரான குடிநீர் வழங்கி, கழிப்பறையை பராமரித்து, மழை நீர் செல்ல கழிவுநீர் கால்வாயை சீரமைத்துத்தர வேண்டும் என்றனர்.

அங்கு வந்த நகராட்சி உதவி பொறியாளர் அறிவழகன், பிட்டர் ராமசாமி மற்றும் போலீஸார் சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்