ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்பனை செய்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை பாலிஷ் செய்து ஓட்டல்கள் மற்றும் அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதாக, சேலம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கோபி, எஸ்ஐ சக்தி ஆகியோர் தலைமை யிலான குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு போலீஸார் கிருஷ்ணகிரி பகுதியில் முகாமிட்டு கண்காணித்தனர்.

கிருஷ்ணகிரி ராசு வீதியில் ஒரு வீட்டில், ரகசியமாக ரைஸ் மில் இயங்குவதும், அங்குரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஓட்டல்கள் மற்றும் அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், அங்கு 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, அதை பாலிஷ் போட்டு ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 52 வரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 2500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்