திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், திருப்பத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான ஷோபனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், வாக்காளர் சுருக்க திருத்த முகாம் மூலம் 45 ஆயிரத்து 970 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை 98 சதவீதம் முடிந்துள்ளது.

சுருக்கத்திருத்தப் பணிகள் முனைப்புடன் செய்து முடிக்கப்பட்டுள்ளது. வாக்கா ளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது குறித்த சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

கூடுதல் பணியாளர்களுக் கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது தான் வாக்குச்சாவடிகளில் ஆட்களை மாற்ற வேண்டும் என்ற எதிர்பாராத சூழல் ஏற்படும் போது சமாளிக்க முடியும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 80 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட உள்ளது.

அதனால், மூத்த வாக்காளர் கள் குறித்து ஆய்வுகளை சரியாக ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டிய ஏற்பாடு களை செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்த கூட்டத்தில் சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்