புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,881-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக நேற்று 7 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 15,488-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,478-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,192-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 18,829 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்