பனியன் சங்கங்களின் கூட்டு கமிட்டிக் கூட்டம்

அனைத்து பனியன் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம், திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஏஐடியுசி பனியன் ஃபேக்டரி லேபர் யூனியன் பொதுச் செயலாளர்சேகர் தலைமை வகித்தார். திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு போடப்பட்ட சம்பள ஒப்பந்தம், கடந்த ஜன.31-ம் தேதியுடன் முடிவடைந்து ஓராண்டாகியும், அனைத்து சங்கங்கள்சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை அளித்து புதிய சம்பள பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டும், இதுவரை முதலாளி சங்கங்கள் அழைக்கவில்லை. இதனைக் கண்டித்து வரும் 9-ம் தேதி பெருமாநல்லூரிலும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருப்பூர் குமரன் சிலை முன்பும் தொழிலாளர்களை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் சம்பத், எல்பிஎஃப் பனியன் சங்கப் பொருளாளர் பூபதி,ஐஎன்டியுசி சங்கச் செயலாளர் சிவசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்