கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 9,037 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 9,037 பேர் தேர்வெழு தினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 69 துணைஆட்சியர் நிலையிலான பணியிடங்களுக்கான குரூப்-1 முதனிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 10,738 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வெழுதுவதற்காக விழுப்புரம் வட்டம் மற்றும் விக்கிரவாண்டி வட்டங்களில் 39 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 5,392 பேர் தேர்வெழுதினர். 5,346 தேர்வர்கள் தேர்வெழுத வரவில்லை.50.21 சதவீதம் தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது.

இந்தத் தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தேர்வு கூடங்கள் கண்காணிக்கப் பட்டன. துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படை அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள 7 நடமாடும் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி உடனிருந்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் சிதம் பரத்தை மையமாகக் கொண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி உள்பட 22 மையங்களில் குரூப்-1 தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுத 6 ஆயிரத்து 971 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 3 ஆயிரத்து 645 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 326 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

தேர்வு மையத்துக்கு தேர்வு எழுதுபவர்கள் செல்ல அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்