வானூர் அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் உள்ள ஆலமரத்தில் அரிய வகை பறவையான செம்மார்பு குக்குறுவான் (Copper Smith Barbet) என்ற பறவை கூட்டமாக வாழ்ந்து வந்தன. கடந்த டிசம்பர் 25-ம் தேதி அங்குள்ள ஆலமரம் அருகே சுமார் 50 பறவைகள் இறந்தும், மயக்கமான நிலையிலும் கிடந்தன.
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புதுச் சேரி, லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த ரவி என்கிற சிரஞ்சீவி (31) என்பவர் பறவையை வேட்டையாடியது தெரியவந்துள்ளது. திண்டிவனம் வனத்துறையினர் நேற்று அவரைக் கைது செய்தனர். பைக் மற்றும் மயக்க மருந்தையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago