தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல்நிலை தேர்வை நேற்று நடத்தியது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தேர்வு 38 இடங்களில் உள்ள 44 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுத மாவட்டத்தில் 12,941 பேர் அனுமதி சீட்டு பெற்றிருந்தனர்.
ஆனால் , 6,782 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் வே. விஷ்ணு பார்வையிட்டார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,440 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,677 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற தேர்வை 3,444 பேர் எழுதினர்.3,220 பேர் பங்கேற்கவில்லை. தூத்துக்குடி கோரம்பள்ளம் குட் ஷெப்பர்டு மாடல் பள்ளி தேர்வு மையத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஏபிசிவி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பி.கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.
மூன்று மாவட்டங்களிலும் விண்ணப்பித்தவர்களில் பாதிபேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago