நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. உதகைசேட் மருத்துவமனையில் மாவட்டஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா முகாமை தொடங்கி வைத்து, களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது,“மாவட்டத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த 5,732 மருத்துவர்கள் செவிலியர்கள், களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக 823 மையங்கள்தேர்வு செய்யப்படவுள்ளன. இதில், 1,232 தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் பட்டியலிடப்பட்டு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago