கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 18 இடங்களில் அம்மா கிளினிக்கள் திறக்கப்பட்டுள்ளதாக கே.பி.முனுசாமி எம்பி தெரிவித் தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவசமுத்திரம், கட்டிக் கானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்புதூர், காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னிஹள்ளி ஆகிய 3 இடங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி மினி கிளினிக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற வசதியாக 50 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுவரை 18 மினி கிளினிக்குகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி சுகாதாரத்துடன் வாழ வேண்டும்,’’ என்றார்.
இதனை தொடர்ந்து 45 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய், சேய் ஊட்டச்சத்து நல பெட்டகம் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை எம்பி வழங்கினார்.
இந்நிகழ்வில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், முன்னாள் எம்பி அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago