கிருஷ்ணகிரியில் நடந்த கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்கான கலந்தாய் வில் 11 பேர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் நிலை -1 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இக்கலந்தாய்வில் 22 பேர் பங்கேற்க உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வுக்கு சிஇஓ பாலமுரளி முன்னிலை வகித்தார். இதில் 11 பணி நாடுநர்கள் கலந்து கொண்டனர்.
இன்று(3-ம் தேதி) நடைபெறும் கலந்தாய்வில் 11 பணி நாடுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வில், பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago