‘வேலைவாய்ப்பு பதிவை பிற மாவட்டத்துக்கு எளிமையாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு’

வேலைவாய்ப்புப் பதிவை மாவட்டம்விட்டு மாவட்டம் மாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது என்று நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள், வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயரும்போது வேலைவாய்ப்புப் பதிவைஅவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் பதிவு மூப்புடன் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு மாற்றம் செய்ய இதுவரை வட்டாட்சியர் அளவில் வழங்கப்படும் குடும்ப குடி பெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது வேலைவாய்ப்பு பதிவை மாவட்டம்விட்டு மாவட்டம் மாற்றிக் கொள்ள நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

மனுதாரர்களால் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், முன்னாள் படை வீரர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தை மட்டும் சமர்ப்பித்து மாவட்டம்விட்டு மாவட்டத்துக்கு வேலைவாய்ப்புப் பதிவை மாற்றிக் கொள்ளலாம். எனவே, வேறு மாவட்டத்துக்குப் பதிவு மாற்றம் செய்ய விரும்பும் மனுதாரர்கள் இவ்வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்