திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் 37 கொலைகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக 121 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டில் இம்மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்டபகுதிகளில் ரவுடிகள், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தோர், மணல் கடத்தல்காரர்கள், கள்ளச்சாராயம் விற்றோர், கஞ்சா கடத்தியோர் என, 72 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
இம்மாவட்டத்தில் பதிவான 359 திருட்டு வழக்குகளில் 310 வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டு போன நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வழிப்பறியில் பறிக்கப்பட்ட 850 செல்போன்களில் 470 போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்மாவட்ட எல்லைக்குள் 37 கொலைகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 121 பேர் கைதாகியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதிவான 8 பாலியல் வன்முறை வழக்குகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2020-ம் ஆண்டில் 835 சாலைவிபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாலை விபத்துகளில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேலான மோட்டார் வாகன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அபராதமாக ரூ.5 கோடியே 86 லட்சத்து 53 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் 1,081மணல் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 932 பல்வேறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஒருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago