கடலூரில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் கற்பனை செல்வம் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். இதில் டெல்லிபோராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர் மழை, புயலால் பாதிக்கப்பட்ட நெல்,வாழை, கரும்பு, உளுந்து, மணிலா,எள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட வேண்டும்.நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம், கரும்பு, வாழைக்கு ஏக் கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடைகள் இறப்புகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
இதுகுறித்து கணக்கெடுப்புநடத்தி நிவாரணம் வழங்கவேண்டும். சேதமடைந்த மின்கம்பங்கள், சாலைகள், பாலங்கள் துரிதமாக செப்பனிட வேண்டும். கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் இழப் பீடு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4-ம் தேதி கடலூர் கோட் டாட்சியர் அலுவ லகம் முன்பும், வரும் 8-ம் தேதி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago