சிறு தானிய சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் உணவு பாதுகாப்பு இயக்கம் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

ஊட்டச்சத்து சிறுதானிய திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கப் பிரச்சாரத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

ஊட்டச் சத்து சிறு தானியங் களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, வரகு போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு விதை உற்பத்தி, விதை விநியோகம் செய்திட மானியம் வழங்கி வருகிறது. வேளாண் துறை மூலம் சிறு தானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக லாபமீட்டும் சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரித்திட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் சிறு தானியங்களை மதிப்புக் கூட்டும் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உணவுப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் வாகன பிரச்சாரம் தொடங்கப் பட்டது.

பிரச்சார வாகனம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய 4 வட்டங்களில் இருந்து தொடங்கப்பட்டது.

இவைகளை மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா நேற்று தொடக்கி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் வளாகத்தில் அமைக் கப்பட்டிருந்த உணவு பூங்காவில் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகளை பார்வையிட்டார். வேளாண் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்