துத்தநாகச்சத்து குறைபாடு நீக்க நெற்பயிர் நடவுக்கு முன்பு ஜிங்க் சல்பேட் இட வேண்டும் வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை

By செய்திப்பிரிவு

நெல் பயிர் நடவுக்கு முன்னர் ஜிங்க் சல்பேட் இட வேண்டும் என கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே மாதேப்பட்டி கிராமத்தில் நெல் நடவுப் பணிகளை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் கூறியதாவது:

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நவரை பருவத்தில் நெற்பயிர் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாக தேவைப்படும் ஊட்டச் சத்துக்கள் தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீஸ் ஆகியவை ஆகும்.

இதில், துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால் விளைச்சல் குறைவு ஏற்படும். துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயிர் நடவுக்கு முன்பு ஒருமுறையும், நட்ட பின் 30 முதல் 40 நாட்களுக்குள் ஒருமுறையும் இட்டு பயிரின் துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்