புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 இடங் களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. ஒரு மினி கிளினிக்கில் தலா 1 மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் பணியில் இருப்பர். சனிக்கிழமை வார விடுமுறையாகும். மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கிளினிக் செயல்படும்.
தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என் றார்.
சாத்தம்பாடியில்...
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சி.ஹேமசந்த்காந்தி, ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி, வட்டாட்சியர் கலை வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago