வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் 250 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் எச்சரிக்கை யையும் மீறி சாகசங்களில் ஈடுபட்டது, மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 250 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் அச்சத்தால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப் பட்டது. மேலும் நள்ளிரவில் முக்கிய சாலை சந்திப்புகளில் புத்தாண்டை கொண்டாடவும் கேக் வெட்டவும் காவல் துறையினர் தடை விதித் தனர். அத்துடன் புத்தாண்டை கொண்டாடுவதாகக்கூறி நள்ளிர வில் இரு சக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடும் வாக னங்களை பறிமுதல் செய்வதுடன் பாஸ்போர்ட் பெறும்போது நன்னடத்தை சான்றிதழ் வழங்கப் பட மாட்டாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நள்ளிரவு புத்தாண்டு கொண் டாட்டத்தையொட்டி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவல் துறையினர் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை விடிய, விடிய 250-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதில், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி சாகசங் களில் ஈடுபட்ட வாகனங் =களை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது, சாகசங் களில் ஈடுபட்டது, ஒரே வாகனத்தில் மூன்று பேர் சென்றது உள்ளிட்ட பிரிவுகளில் மாவட்டம் முழுவதும் ஒரே இரவில் 200 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே இரவில் 50 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்