திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் க.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாரிடம் நேற்று அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சியில் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் வரி அதிகமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக குப்பை வரி, சொத்து வரியுடன் சேர்த்து வசூல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி விதிப்பு அபராதத் தொகை அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.
பல இடங்களில் 10 நாட்களுக்குஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதை முறைப் படுத்தி 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகரப் பகுதியில் குப்பை முறையாக எடுக்காமல் ஆங்காங்கே மலைபோல குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாநகரில் தெருவிளக்குகள் பல இடங்களில் சரிவர எரிவதில்லை. தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பராமரிப்புப் பணியை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சாலைகள் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் ஏற்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago