ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1135 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து48,666 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. டோக்கன்வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. வரும் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் என நாளொன்றுக்கு 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா காலம் என்பதால் பொதுமக்கள் சமூக இடை வெளியை பின்பற்றவும், கடையை சுற்றி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கும்போது, 2000 ரூபாய் நோட்டு ஒன்று மற்றும் 500 ரூபாய் நோட்டு ஒன்று வழங்கவேண்டும். மாறாக ரூ. 500 தாள்களாக 5 நோட்டுகள் வழங்கினால், குடும்ப அட்டைதாரர் கண்முன்னே எண்ணி வழங்கவேண்டும். இதனை அனைத்து கடைகளும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல கூட்டம் அதிகமுள்ள இடங்களில் தேவையான போலீஸ்பாதுகாப்பு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago