நூல் விலை உயர்வால் பாதிக்கப்படும் பின்னலாடைத்துறை

By செய்திப்பிரிவு

கடந்த சில வாரங்களாக நூல் விலை உயர்ந்து வருவதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பின்னலாடைத் துறைக்கு மூலாதாரமாக நூல் திகழ்வதால், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவேண்டுமென தொழில்துறையினர் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து ஜவுளித்துறை கூட்டமைப்பினர் சார்பில் இணையம் வழியாக அவசரஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் முன்னிலை வகித்து பேசும்போது, "நூல் விலை உயர்வு, தட்டுப்பாடு ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆர்டர்களை பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

ஆர்டர்கள் பெற்றிருந்தாலும், நூல் விலை உயர்வை காட்டி ஆடைகளின் விலையை உயர்த்தினால், வர்த்தகர்களிடம்பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களும் அந்த விலையேற்றத்துக்கு சம்மதிப்பதில்லை. இதனால்தொழில்துறையினர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஆர்டர்களும் ரத்துசெய்யப்படுகின்றன. ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் தொழில்துறையினருக்கு தட்டுப்பாடின்றி நூல் கிடைக்கவும், நூல் விலை சீராக இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதனை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், வட இந்திய நூற்பாலைகள் சங்கம், பருத்தி கழகம் உள்ளிட்ட தொழில் கூட்டமைப்புகள் உறுதி அளித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்