காஞ்சி மாவட்டத்தில் புத்தாண்டை கொண்டாட கட்டுப்பாடு 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைப்பு போதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் புத்தாண்டு தினத்தைஒட்டி 16 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போதையில் வாகனம் ஓட்டினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாகபுத்தாண்டு தினத்தை கொண்டாட பலபாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு கடந்த வாரம்பிறப்பித்த அரசாணையின்படி ரெஸ்டாரெண்ட், ஓட்டல்கள், கிளப்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வரும் வாக னங்களைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், அதிவேகமாகவும் போதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கும் 16இடங்களில் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. பெரும்புதூர் சந்திப்பு, வல்லக்கோட்டை சந்திப்பு, வாலாஜாபாத் சந்திப்பு, பொன்னேரிக்கரை சந்திப்பு, கீழம்பி சந்திப்பு, படப்பை சந்திப்பு, ஒரகடம் சந்திப்பு, வாலாஜாபாத் சந்திப்பு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மீறி போதையிலும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கூடவோ, கேக் வெட்டி, பட்டாசு வெடித்துபுத்தாண்டை கொண்டாடவோ அனுமதி யில்லை. கார் போன்ற வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் தங்கும் விடுதிகளில் உரிய விவரம் இல்லாத நபர்களை தங்க வைக்கக் கூடாது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும்.

இந்தப் புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே கொண்டாடி கரோனா தொற்றில் இருந்து தங்களையும் மற்றும் சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்