இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துபாண்டியன், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முத்துச் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் பீட்டர் வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் பேசினார்.
சுகாதாரத் துறை அறிவுரைப்படி சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதுநிலை பட்டதாரி கழக அமைப்புச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago