சேந்தமங்கலம் அருகே காரவள்ளியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 53 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளன. முதல் கட்டமாக 18 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. கிளினிக்குகள் ஊரக பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும். நகர்ப்புறங்களில் மாலை வேளையில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் என 8 மணி வரை செயல்படும், என்றார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், ஊராட்சித் தலைவர் ஆர். காளியம்மாள் உள்பட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago