தடுப்பணைகளுக்கு நீரேற்றுப் பாசனத் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், என அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் பங்கேற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கான தோனிமடுவு திட்டம், மணியாச்சிப்பள்ளம் திட்டம் மற்றும் மேட்டூர் உபரிநீர்பாசனத் திட்டம் ஆகியவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்காக மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக் கிறோம். ஒருவேளை மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், தற்போது கட்டப்பட்டுள்ள தடுப்பணை களுக்கு நீரேற்று பாசனத் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகை பெறு வதில் யாரும் விடுபட்டு விடக் கூடாது என்பதற்காகவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிமுகவினர் உதவி வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்தால் திமுகவுக்கு பிடிக்காது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago