ஈரோடு கால்நடைச் சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் வியாழக் கிழமையன்று கால்நடைச் சந்தை நடந்து வருகிறது. நேற்று நடந்த சந்தைக்கு 800 மாடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன.
இதில், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், தேனி, ஓமலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் முன்னிலையில் மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறும்போது, இன்றைய சந்தையில் 450 கறவை மாடுகள், 250 எருமைகள், 100 கன்றுகள் என மொத்தம் 800 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், பசு மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன. மொத்த மாடுகள் வரத்தில் 85 சதவீதம் விற்பனையானது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago