வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கசாலை விரிவாக்க பணி வரும் 18-ம் தேதி தொடங்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பகுதியை அகற்றி சாலை விரிவுபடுத்தும் பணி வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் குறைக்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகரில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடைமுறைகள் வந்தா லும் தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக, கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வேலூர் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில் நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலையின் அளவை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பாலத்தின் அடியில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பயன்படுத்தாமல் இருக்கும் பகுதிகளை இடித்து அப்புறப் படுத்த உள்ளனர். இதன்மூலம் காட்பாடியில் இருந்து வேலூர் வரும் வாகனங்களும் புதிய பேருந்து நிலையம் வழியாக காட்பாடி செல்லும் வாகனங்களும் சிரமம் இல்லாமல் செல்ல முடியும்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.

இதில், பசுமை வட்டம் பகுதியில் சாலையை அகலப்படுத்தப்படும். கிரின் சர்க்கிள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி பகுதியில் சாலையைவிட அதிக உயரத்தில் இருக்கும் மழைநீர் கால்வாயின் உயரத்தை குறைக் கப்படும்.

சாலை மட்டத்துக்கு கால்வாய் அமைத்து புதிய சாலை அமைப்பதால் இரண்டு பக்கமும் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை புதிய சாலை கிடைக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்