தீ விபத்தில் எரிந்த கடைகள் சீரமைப்பு

By செய்திப்பிரிவு

உதகை நகராட்சி சந்தையில் தீ விபத்தில் 85 கடைகள் எரிந்து நாசமாயின. உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கியதால் புதிய கடைகள் கட்டுமானப்பணிகள்தொடங்கியுள்ளன. இப்பணிகளை எம்எல்ஏ ஆர்.கணேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ‘‘கடைகுத்தகைதாரர்களின் கோரிக்கையின்படி ஷட்டர் அமைக்க வேண்டும். கடைகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்’’ என நகராட்சிப் பொறியாளரிடம் வலியுறுத்தினார். ஆய்வின்போது, நகராட்சி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரவிகுமார், ராஜா முகமது, ரபீக் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்