பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்றுவந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்லடம் கிளை மேலாளருக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பொதுமுடக்க காலத்தில் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தற்போது பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டு பல நாட்களாகியும் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இன்றளவும் இயக்கப்படவில்லை. பல்லடத்திலிருந்து சோமனூர் செல்லும் (பி9) வழித்தட பேருந்து இயக்கப்படவே இல்லை. இதனால் நடுவேலம்பாளையம், ஊஞ்சப்பாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பி18 வழித்தடப் பேருந்துநடுவேலம்பாளையம், அய்யன்கோயில் வழியாகச் செல்லாமல் நேராக காரணம்பேட்டை சென்று சோமனூர் செல்வதால் இந்த கிராமங்களுக்கு பேருந்து வசதியே இல்லை. எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து சேவை, மீண்டும் அந்தந்த கிராமங்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago