காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயில் சிவலிங்கம் உள்ளிட்ட உருவங்கள் இருந்த கோயில் தூண்கள் கேட்பாரற்று கிடந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்று இந்து சமய அறநிலை துறைக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து இத்தூண்கள் எந்தக் கோயிலுக்கு சொந்தமானவை என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தார்.உடன் ஓணகாந்தேஸ்வரர் கோயில் அதிகாரிகளும் இருந்தனர். இந்த ஆய்வின்போது ஓணகாந்தேஸ்வரர் கோயிலில் இருந்த மண்டபம் ஒன்று தனியார் சிலரால் இடிக்கப்பட்டதாகவும், அதன் தூண்கள்தான் இவை என்றும் சிலர் தெரிவித்தனர். அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago