தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மத்திய அரசின் ரூசாநிதி உதவியோடு சிதம்பரம் அண் ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, அண்ணாமலை புதுமை புனைவு மற்றும் உள்வளர் ஆராய்ச்சி அறக்கட்டளையை (ஏஐஐஆர்எப்) உருவாக்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் மற்றும் தொழில் மேன்மை பெறவும் அடிப்படை கட்டமைப்புகளை உரு வாக்கி தருகிறது.
இந்த அறக்கட்டளையுடன் ஏற்கெனவே 3 பயனாளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் நூர்ஜ கான், விஷால் ஆகிய இரண்டு தொழில் முனைவர்கள் இந்தஅறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன், பதிவாளர் பேராசிரியர் ஞான தேவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
பொறியியல் புல முதல்வர் மற்றும் திட்ட அதிகாரி முருகப்பன், ஆராய்ச்சி மற்றும் மேன்மை படுத்துதல் இயக்குநரகத்தின் இயக்குநர் மற்றும் ஏஐஐஆர்எப் இயக்குநருமான வெங்கடாஜலபதி, முன் னாள் மாணவர்கள் தொடர்பு மைய இயக்குநர் மற்றும் ஏஐஐஆர்எப் இயக்குநருமான சரவணன், திட்டஒருங்கிணைப்பாளர் முத்து வேலா யுதம் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டேனியல் பிராபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதற் கான ஏற்பாடுகளை ஏஐஐஆர்எப் அறக்கட்டளையின் அலுவலர்கள் நிர்மல்ராஜ் மற்றும் ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago