கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கேட்டு பாமக ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு அளித்தனர்

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் பாமக சார்பில், வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுவழங்க வேண்டும். கல்வி மற்றும்வேலை வாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தின ரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட அரசை வலியுறுத்தியும் பாமக மற்றும் வன்னியர்சங்கம் பல கட்டகளாக போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பாமகவினர் நேற்றுபேரணியாக சென்று மனு அளித் தனர். இதில் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் சண்முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழதாம ரைக்கண்ணன், முன்னாள் மாநில நிர்வாகி தர்மலிங்கம், நகர செயலாளர் ஆனந்த், போஸ் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையிலும்,விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநில துணைத்தலைவர் அன்புமணி தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி தலைமையிலும், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கனல்பெருமாள், மாவட்ட துணை செயலாளர் ஜெயகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்