சிறப்புப் பார்வையாளரிடம் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று புகார் அளித்தனர்.
சிறப்பு வாக்காளர் சுருக்கத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சிறுதொழில் முதலீட்டு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநரும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்புப் பார்வையாளருமான சிஜி தாமஸ் வைத்யன் வாக்காளர் சுருக்கத் திருத்தம் பணிகள் மேற்கொள்வது குறித்து கட்சியி னருக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆட்சியர் இரா.கண்ணன் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 1881 வாக்குச் சாவடிகள் உள்ளன. சில வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடங்களில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு பார்வையாளர் சிஜிதாமஸ் வைத்யன்கூறுகையில், கரோனா காலத்தில் நடத்தப்படும் இத்தேர்தலில் முன்னேற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு இருந்தால்தான் தேர்தலை சிறப்பாக நடத்த முடியும் என்றார்.
ஆட்சியர் மற்றும் சிறப்பு பார்வையாளரிடம் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் தொடர்பான ஆவணங்களை திமுக எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago