கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.13 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 4-ம் தேதி முதல் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கத் தொகை ரூ.2,500 ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 318 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் 13-ம் தேதி விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான சந்தேகங் களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலக தொலைபேசி எண் 04343-234677ல் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்