மின் வாரிய பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போச்சம் பள்ளி மின்வாரிய செயற் பொறியாளர் (இயக்கம் மற்றும்பராமரிப்பு) முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூர் உபகோட் டத்திற்குட்பட்ட உதவி மின் பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் சந்தூர் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி முதல் இந்த அலுவலகம், காட்டாகரம் துணை மின் நிலைய வளாகத்தில் சொந்த கட்டிடத்தில் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்