வன்னியர்களுக்கு அரசு உயர் பதவிகள், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய மண்டலத்தில் நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டம், மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் ஒற்றுமை திடலிலி ருந்து பாமக மாநில துணைத் தலைவர் சின்னதுரை தலைமையில் ஊர்வலமாக சென்ற பாமகவினர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். திருமானூரில் தொகுதி செயலாளர் தர்ம.பிரகாஷ் தலைமையில் பாமக மாவட்டத் தலைவர் ரவிசங்கர், தா.பழூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அசோகன் ஆகியோர் முன்னிலையில் பாமகவினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
செந்துறையில் மாநில செயற் குழு உறுப்பினர் சாமிதுரை தலைமையிலும், ஜெயங்கொண் டத்தில் மாநில செயற்குழு உறுப் பினர் ராஜேந்திரன் தலைமை யிலும், ஆண்டிமடத்தில் துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையிலும் சென்று பாமகவினர் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூரில் பாமக மாநில துணைத் தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, நகரச் செயலாளர் இமயவரம்பன், ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்திரன், சிவசங்கரன் உள்ளிட்டோர் பேரணி யாக சென்று, பெரம்பலூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.வேப்பூர் ஒன்றிய அலுவலகத் தில் பாமக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மேலும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பாமக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டத்தில்...
திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் ரவி, ரமேஷ், பாலச்சந்தர் முன்னிலை வகித்தனர். இதேபோல, திருச்சி கிழக்கு, மேற்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலாளர் பால தண்டாயுதம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பின்னர், கொள்ளிடம் ஒன்றிய ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் பாமக, வன்னியர் சங்கத்தினர் பேரணியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாமக மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணிய அய்யர் தலைமை வகித்தார். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago