ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,810-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,444-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,435-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 135-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago