இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.ஈசுவரன் கூறும்போது, "சின்னக்கரை பாலத்தில் நின்று பார்த்தபோது, அந்த ஓடையில் இதுவரை இல்லாத அளவில் சாயக் கழிவுநீர் ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை சாயக் கழிவுநீரை நிலத்துக்குள் விட்டு பாழ்படுத்தியவர்கள், தற்போது ஓடையில் திறந்துவிட்டுள்ளனர். இந்த சாயக் கழிவுநீர் ஜம்மனை ஓடை வழியாக நொய்யலாற்றிலேயே கலக்கும். வேறு எங்கும் செல்லாது. இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago